தம்பதியினர் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை நடத்த தினசரி வேலை செய்வது கட்டாயம் ஆகிவிட்டது. அவ்வாறு ஓடியாடி வேலை செய்யும் மக்கள், தங்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக அளவு கவனம் செலுத்துவதில்லை. அதன்படி தம்பதியினர் தங்கள் உறவுக்குள் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதில்லை. அவர்கள் இதை கவனிக்க வேண்டும். நீங்கள் தினசரி எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள்? பொழுதுபோக்கு வீட்டு பராமரிப்புக்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?
இந்த நேரத்தை நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் ஒன்றாக செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுங்கள். எல்லாம் சம நிலையில் இருக்கிறதா? இல்லையென்றால் நீங்கள் இருவரும் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள். உங்கள் பணி வாழ்க்கையைவிட, மண வாழ்க்கைக்கு முக்கியமானது. இதை கட்டாயம் உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.