குடிபோதையில் மனைவியை தாக்கிய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலத்தைகுளத்தில் சங்கிலிபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிபோதையில் அவரது மனைவி பத்திரகாளியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பத்ரகாளி பணம் தர மறுத்ததால் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கிலிபாண்டி இரும்பு கம்பியால் தனது மனைவியை சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பத்திரகாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து பத்திரகாளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கிலிபாண்டியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பளையம்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.