Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூறைநாடு தனியூர் வாணிய தெருவில் வீடியோகிராபரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணலதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ராஜேஷ் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு சொர்ணலதாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணத்தின்போது சொர்ணலதா வரதட்சணையாக கொண்டு வந்த 25 பவுன் நகையையும் ராஜேஷ் அடமானம் வைத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் மனவுளைச்சலிலிருந்த சொர்ணலதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சொர்ணலதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி சொர்ணலதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |