சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜகீழ்பாக்கம் பகுதியில் டாக்டரான கற்பகவாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுசுதன், சீனிவாசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மதுசுதன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் டாக்டரான சீனிவாசன் விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
கடந்த ஆறாம் தேதி சீனிவாசனுக்கு திதி நடந்தது. தம்பிக்கு திதி கொடுத்த மதுசுதன் மன உளைச்சலில் வீட்டில் யாரிடமும் பேசாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுசுதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.