Categories
மாநில செய்திகள்

தம்பிதுரை மீது நில ஆக்கிரமிப்பு புகார்…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை அளந்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த கோனாம்பேடு கிராம பொது நல சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்காக ஏராளமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.

கிராம நிலத்தை ஆக்கிரமித்து துணை மின்சார நிலையம், மாணவர்கள் விடுதி ஆகியவை கட்டப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு அருகில் உள்ள ஆவடி நகராட்சி பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று மனுவில் முறையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கானது நீதிபதி கல்யாணசுந்தரம், நீதிபதி வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்று எதிர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மாவட்ட வருவாய் அதிகாரி உயரிய நோட்டீஸ் வழங்க வேண்டுமென்று ஆணையிட்டனர். மேலும் மனுதாரர் குறிப்பிட்ட இடத்தில் அளவீடு செய்து அதை வீடியோவில் படம் பிடித்து உரிய ஆவணங்களுடன் 3 வாரத்துக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தர விட்டுள்ளனர்.

Categories

Tech |