இளம் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல் நகரில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் உள்ளார். இந்த பெண் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி தனது சகோதரரான ராஜ் என்பவருடன் சர்மிளா தாடிக்கொம்பு பேருந்தில் சென்றுள்ளார்.
இந்நிலையில் அக்கா தம்பி இருவரும் கோவிலை நோக்கி நடந்து சென்றபோது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சர்மிளாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சர்மிளா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.