கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் அருகே 9 வயது சிறுமி தனது தம்பியுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது கூலி தொழிலாளியான தனுஷ் என்பவர் சிறுமியின் தம்பியிடம் 10 ரூபாய் கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தனுஷ் அந்த சிறுமியை தூக்கி சென்று ஆவாரம்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது சிறுமி கூச்சலிட்டதால் தனுஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் தனுஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.