நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மொளசி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கர்(28), நந்தகோபால்(24) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் சங்கர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நந்தகோபால் பெருந்துறை பவானி ரோட்டில் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று சங்கர் தனது தம்பியை தேடி பெருந்துறைக்கு சென்றார். இந்நிலையில் கடைக்குள் சென்ற சங்கர் திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நந்த கோபால் தனது அண்ணனை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சங்கரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.