தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள் சந்தை அருகே பாறையன்விளை பகுதியில் ஹோட்டலில் வேலை பார்க்கும் முகமது காஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சையது அலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இதில் முகமது காஜா வேலைக்காக திருச்சியில் தங்கி இருக்கிறார். இவருடன் செய்யது அலி பாத்திமாவின் தம்பி பயாஸ் அகமதுவும் தங்கி இருந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பயாஸ் முகமது இறந்த துக்கத்தில் இருந்த செய்யது அலி பாத்திமா எதுவும் சாப்பிடாமல் இருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக செய்யது அலி பாத்திமாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அழிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செய்யது அலி பாத்திமா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக இரணியல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.