சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 12 வயது சிறுவனுக்கு பலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெரியம்மா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமகிருஷ்ணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.