தனது முன்னாள் மனைவியின் காதல் குறித்த கேள்விக்கு பிரபல நடிகர் பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பாலா. இவர் ஒரு சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறலாம். ஏனெனில் நடிகர் பாலாவின் அப்பா ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவருடைய சகோதரர் சிறுத்தை சிவா பற்றி சொல்லவேண்டிய அவசியமே கிடையாது. அவரைப் பற்றி அறியாதவர் எவருமே இருக்க மாட்டார். இந்நிலையில் நடிகர் பாலா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் அவருக்கு தமிழ் படங்கள் பெரிதாக கை கொடுக்காததால் மலையாள திரையுலகிற்கு சென்றார்.
அங்கு அவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. இதனால் மலையாள சினிமாவில் நடிகர் பாலா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார். ஆனால் கடந்த 2019-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பாலாவும் அம்ருதா சுரேஷும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதையடுத்து பாலா எலிசபெத் என்ற மருத்துவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இவரின் முதல் மனைவி அம்ருதா சுரேஷ் தற்போது இசையமைப்பாளர் கோபி சுந்தரை காதலித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் எடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாலாவிடம் அவரின் முதல் மனைவி அம்ருதா சுரேஷின் காதல் உறவு பற்றி கேட்டபோது நான் எனது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அம்ருதா சுரேஷ் மகிழ்ச்சியாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். அவரைப் பற்றி வேறு எதுவும் கூற விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.