Categories
அரசியல்

தம்பி…! வசைபாடுவதை நிறுத்துங்க…. இனி நல்ல பிள்ளையா நடந்துக்கோங்க…. அண்ணன் ஜெயக்குமார் அட்வைஸ்…!!!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் லக்னோவில் நடந்த 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இதுதொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தினுடைய நிதியமைச்சராக இருந்துகொண்டு அந்த பொறுப்புக்கே  களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சையாகவும், பெரியவர் சிறியவர் பேதமில்லாமல் ட்விட்டரில் வசைபாடுவதும் பதவிக்கு அழகல்ல.

முதன்முறையாக அமைச்சரான காரணத்தினால் தலைகால் புரியாமல் பேசுவதால் சில வரலாற்று உண்மைகளை உங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்து கொண்டு ஜிஎஸ்டின் வரலாறு தெரியாமல் இருப்பது தங்களுக்கு அழகு கிடையாது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இருந்தபோது, தமிழகத்திற்கு மத்திய அரசு வைத்திருந்த வாட் வரிக்கான நிலுவை தொகை மட்டும் ரூ.4080 ஆயிரம் கோடி. அப்போது நீங்கள் நினைத்திருந்தால் ஆட்சியை கலைத்து கலைத்து நிலுவை தொகையை பெற்று இருக்கலாம்.

ஆனால் அவ்வாறு செய்யவில்லை பதவிக்கு ஆசைப்பட்டு தமிழக மக்களின் நலன்களை அடகுவைத்துள்ளீர்கள். அதன் நீட்சியாக இப்போதும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கிறீர்களோ என்று எண்ணம் வருகிறது. “பதவி வரும்போது பணிவும், துணிவும் வரவேண்டும் “என்று எம்ஜிஆர் பாடியிருப்பார் இந்த பாடல் யாருக்கு பொருந்துகிறதோ? இல்லையோ? உங்களுக்கு மிகவும் பொருந்தும். நானும் படித்தவன் தான். இரண்டு பட்டங்கள் பெற்றவன்தான்.  அதற்காக நான் ஒருநாளும் கர்வம் கொண்டது கிடையாது.

நீங்கள் ஏன் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை? என்று நான் கேள்வி எழுப்பினால், நான் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று நீங்கள் எதிர் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். அன்றைய தினம் தமிழக நிதியமைச்சர் என்ற முறையில் நான் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தேன். எனவே டுவிட்டரில் இருந்தும், மற்றவர்களை வசை பாடுவதில் இருந்தும் விலகி மக்களைப் பற்றி சிந்திக்க தொடங்குங்கள். இனியாவது நல்ல மாணவன் எப்படி தவறாமல் பள்ளிக்கு செல்வானோ? அதேபோல கடமை உணர்வோடு ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |