விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று சீமான் விஜய் ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சமீபத்தில் நடிகர் விஜய் பற்றி கருத்து தெரிவித்து பெரிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இதனால் இணையத்தில் விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தனர். மேலும் சீமானை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை கிளப்பி வந்தனர். அடிக்கிற அடியில் ரஜினி, கமல், விஜய் என சினிமா நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கவே கூடாது என்று சீமான் அதிரடியாக பேசியிருந்தார். மேலும் சர்க்கார் படம் சர்ச்சையில் இது தொடர்பாக சீமான் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் விஜய் ரசிகர்கள் சீமானை விமர்சிக்கும் விதமாக இது எச்சரிக்கை அல்ல கட்டளை என்றும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். தற்போது சீமான் இதற்கு பதிலளிக்கும் விதமாக “விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது. குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும். மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.