Categories
தேசிய செய்திகள்

தம்ஸ் அப் மலை உச்சியிலிருந்து…..!! மலையேற்ற பயிற்சியாளர்கள் இரண்டு பேர் மரணம்…. பெரும் பரபரப்பு….!!

நாசிக் மாவட்டம் சந்த்வாட் தாலுகாவில் 120 அடி உயர தம்ஸ் அப் என்ற மலை உள்ளது. இந்த மலையில் மலையேற்ற பயிற்சியாளர்கள் அடிக்கடி ஏறுவது வழக்கம். அந்த வரிசையில் அகமது நகரை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் மலையின் மீது ஏறியுள்ளனர். தொடர்ந்து வெற்றிகரமாக மலையின் உச்சிப் பகுதியை அடைந்து பின்னர் கீழே இறங்கி உள்ளனர். கீழே இறங்கும் போது அந்த குழுவில் உள்ள தொழில்நுட்ப தலைவரான மயூர் தத்தாரே மாஸ்கே (வயது24), அனில் சிவாஜி வாக் (34) உள்ளிட்ட 3 பேர் தம்ஸ் அப் மலையிலுள்ள மன்மாட் என்ற பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த கிராமத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுமார் 110 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தால் மயூர் தத்தாரே மாஸ்கே, அனில் சிவாஜி வாக் ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |