எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்று இந்த தொகுப்பில் காணலாம் .
பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும். பழங்களில் அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை உள்ளது. சில பழங்கள் ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது ஆபத்தாக மாற காரணம் அவற்றின் செரிமான வேகத்தை பொருத்து தான். இந்த பதிவில் எந்த பழங்களை ஒன்றாக சாப்பிட கூடாது என்பதை காணலாம்.
கேரட் மற்றும் ஆரஞ்சு இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமானது தான். ஆனால் அவை தனித்தனியாக சாப்பிடும்போது மட்டும் தான் ஆரோக்கியம். இரண்டும் ஒன்றாக சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எலுமிச்சை நம் அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால் பப்பாளி எலுமிச்சை சேர்த்து சாப்பிடும்போது ரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாகும்.
நாம் அன்றாடம் சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம். இதோடு கொய்யாப்பழம் சேர்த்து சாப்பிடுவதால் அமிலத்தன்மை, குமட்டல் மற்றும் தலை வலி ஆகியவை ஏற்படும் அபாயம் இருக்கும்.
திராட்சை பழம், ஸ்ட்ராபெரி போன்ற அமில பழங்களை அல்லது மாதுளை, ஆப்பிள், பீச் போன்ற துணை அமில பழங்களை மற்ற பழங்களோடு ஒருபோதும் கலக்க கூடாது. அப்படி மீறி கலந்தால் குமட்டல், தலைவலி, நெஞ்செரிச்சல் போன்ற ஆபத்துகள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.