பெரம்பலூரில் முககவசம் அணியாமல் சென்ற 175 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை அடுத்து உள்ள அரும்பாவூர் காவல்துறையினர் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றவர்களிடம் ரூ.200-ஐ அபராதமாக வசூலித்து வந்தனர்.
அந்த வகையில் அரும்பாவூர் காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களில் முககவசம் அணியாமல் சென்ற 175 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணிந்து கொரோனா பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.