Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“தயவுசெய்து பெண்களை திட்டாதீங்க”…. கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி…. சோக சம்பவம்…..!!!!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்தில் இருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் அந்த விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் சடலத்தில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால் அவர் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே மாணவி பயன்படுத்திய நோட்டுப் புத்தகங்களை ஆய்வு செய்வதில் கடிதம் ஒன்று சிக்கியது.

அந்தக் கடிதத்தில், தனக்கு வகுப்பு எடுக்கும் ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை தன்னை படிக்காமல் விளையாட்டுத்தனமாக இருப்பதாக கூறி மற்ற மாணவர்கள் முன்னிலையில் கண்டித்தனர். இது தனக்கு பெருத்த அவமானமாக இருந்ததால் இந்த முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டது. தயவுசெய்து மாணவிகளை இப்படி பேசாதீர்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல் பள்ளி கல்வி கட்டணம் மற்றும் இறுதி கட்டணம் ஆகியவற்றை தனது பெற்றோரிடம் கொடுத்து விடும் படியும் தனது தோழிகள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அந்த மாணவி கடிதத்தில் எழுதி இருந்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |