Categories
தேசிய செய்திகள்

தயவு செஞ்சி…! எங்க வீட்டை இடிச்சிருங்க….. உ.பி முதல்வரிடம் வேண்டுகோள்…. காரணம் என்ன….???

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு  வீடுகளில்  தரமற்ற கட்டுமான பொருள்கள் கொண்டு கட்டப்பட்டதாகவும் தற்போது வீடுகள் விரிசல் அடைந்திருப்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் எனவே தானாக இடிந்து விழுவதற்குள் இந்த குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு 30 வருடங்களாக உழைத்து சம்பாதித்த பணத்தில் வீட்டை வாங்கினோம். ஆனால் அந்த வீட்டில் 10 வருடங்கள் கூட முழுமையாக எங்களுக்கு இருக்க முடியாத அளவிற்கு வீடு தர மற்ற நிலையில் கட்டப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

Categories

Tech |