Categories
தேசிய செய்திகள்

தயவு செய்து ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு போகாதீங்க…. காவல்துறையினரிடம் மண்டியிட்டு கெஞ்சும் நபர்…. கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி….!!

ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்லும் காவல்துறையினரிடம் கொண்டு செல்ல வேண்டாம் என ஒருவர் கெஞ்சும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆக்ராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு செல்ல வேண்டாமென ஆண் ஒருவர் காவல்துறையினரிடம் மண்டியிட்டு கேட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கொரோனா உடை அணிந்து காவல்துறையினர் முன் மண்டியிட்டு நான் சிலிண்டருக்கு எங்கு செல்வேன் என்றும் என் அம்மாவை எப்படி காப்பாற்றுவேன் என்றும் கதறுகிறார். இந்நிலையில் அவரை கண்டுகொள்ளாத நிலையில் காவல்துறையினர் தங்கள் கடமையை செய்து சிலிண்டரை எடுத்துச் செல்கின்றனர்.

இந்த காட்சியை பார்த்து பலரும் காவல்துறையினருக்கு கண்டனங்களையும். எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  இதுக்குறித்து காவல்துறை கூறுகையில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டரை காவல்துறையினர் எடுத்துச் செல்லவில்லை என்றும் அந்த நபர் உறவினருக்காக புதிய சிலிண்டரை ஏற்பாடு செய்து தரக்கோரி காவல்துறையிடம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |