Categories
உலக செய்திகள்

தயவு செய்து இதை திரும்ப கொண்டு வராதீங்க…. பெண்களுக்கு ஆதரவாக திரும்பிய ஈரான் அரசு…. எச்சரிக்கை விடுக்கும் உலக நாடுகள்….!!!!!

ஹிஜாப்  போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஆதரவாக பல நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2  மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் மாஷா என்ற இளம் பெண்ணை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஹிஜாப்பை கழற்றி வீசியும், தீ வைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது வரை இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெண்களின் போராட்டங்களுக்கு அந்நாட்டு அரசு பணிந்துள்ளது. அதாவது   பெண்கள் ஹிஜாப் அணிவதை உறுதிப்படுத்தும் அறநெறி போலீஸ் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.

இது நிரந்தரமானதா? இல்லை தற்காலிகமானதா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. மேலும் இதில்  தங்களுக்கு நம்பிக்கை இல்லை என அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “அரசு பெண்கள் மற்றும் சிறுமிகளை நடத்தும் அணுகுமுறை இன்னும் மாறவில்லை. ஆனால் போராட்டக்காரர்கள் மீது நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்துள்ளது என கூறியிருந்தது. இதனையடுத்து ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாவது “ஈரான் மக்கள் சுதந்திரமாகவும், சுய நிர்ணய உரிமையுடனும் வாழ விரும்புகிறார்கள். அறநெறி காவல் துறையை  கலைத்துள்ளீர்கள் என்றால் அதில் மீண்டும் மாற்றத்தை கொண்டு வராதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |