பிரித்தானியாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அகதியாக நாட்டிற்கு வந்த உக்ரைனிய பெண் மீது காதல் கொண்டு மனைவியை கைவிட்டதற்கு பிரபலமாக அறியப்பட்டவர் டோனி கார்னெட்(30). இவர் உக்ரைனிய அகதியான 22 வயது சோபியா கர்கடிம் மீது காதல் கொண்டு அவர் தனது பத்து வருட மனைவி லோர்னாவையும்(28) அவரது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வெளியேறி புதிய காதலியுடன் புதிய வீட்டில் குடியேறியுள்ளார். ஆனால் இரு திங்களுக்கு முன் தனது உக்ரைனிய காதலி சோபியா உடன் தனது உறவு முடிந்து விட்டது எனவும் கடந்த சனிக்கிழமை வாக்குவாதத்திற்கு பின் அவரிடம் 100% முடிவடைந்து விட்டது எனவும் கூறியுள்ளார். இதற்கு மேல் அவரைத் தாங்கிக் கொள்ள முடியாது என தனது வீட்டை விட்டு விரட்டியதாக தெரிவித்துள்ளார் டோனி.
அவர்களின் நான்கு மாத உறவு முடிந்து விட்டதாக செய்தி வெளியிட்டு சிறிது நேரத்திலேயே சனிக்கிழமை இரவு அதிகாரிகளை அழைத்து சோபியா கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர்கள் பகிர்ந்திருந்த வீட்டை விட்டு வெளியேறிய பின் சிறிது நேரத்தில் சோபியா மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறாள். இந்த நிலையில் அவர் டோனியை வெளியில் நின்று திட்டியதால் அக்கம் பக்கத்தினர் கோவம் அடைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கத்திக்கொண்டே இருந்த அவர் டோனியின் வீட்டின் முன்பு கதவை உதைத்து உடைக்கும் முயற்சி செய்ததனால் கடுப்பான டோனி விரைவாக போலீசாருக்கு போன் செய்துள்ளார். இந்த நிலையில் பிரச்சினை செய்த சோபியா வேண்டுமென்றே தோட்ட சுவரில் ஏறி இருக்கின்றார் அதன் பின் அருகில் உள்ள புதிர்களின் மறைந்திருந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அதிகாரிகள் அழைத்து செல்லும்போது டோனி, ஐ லவ் யூ தயவு செய்து என்னுடன் வாருங்கள் என கூச்சலிட்டு இருக்கிறார். மேலும் அவர் குற்றம் சாட்டப்படாமல் விடுவிக்கப்படுவதற்கு முன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.