பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நேஹா நடித்து வருகிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியையும் நடிகை நேஹாவையும் ஒப்பிட்டு மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து நடிகை நேஹா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"Don't compare me with Sivaangi" – Neha Menon of "Bakkiyalakshmi" fame pic.twitter.com/LA1dVNnf9n
— Viral Briyani (@Mysteri13472103) April 9, 2021
அதில் அவர் ‘என்னை சிவாங்கியுடன் ஒப்பிட்டு வெளியான மீம்ஸை பார்த்தேன் . நான் அதை மிகவும் ரசித்தேன். ஆனால் உங்களை நீங்களே சிவாங்கியுடன் கம்பேர் பண்ணாதீங்க என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதையே தான் நானும் சொல்கிறேன். என்னை யாரும் சிவாங்கியுடன் கம்பேர் பண்ண வேண்டாம். அவர் வேற லெவல் திறமையானவர். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை . எனவே தயவு செய்து அவருடன் என்னை கம்பேர் பண்ண வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.