Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இனி எந்தக் கவலையும் இல்ல….. எல்லாம் தயாரா இருக்கு…. புதிதாக 480 படுக்கைகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 450 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட் டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது 480 படுகைகள் தயார் நிலையிலுள்ளது. அதில் 240 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து தொற்று அதிகரித்து நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை வந்தாலும் போதுமான அளவில் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அதிகமாக வருவதால் நர்சுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியிடங்களை நிரப்ப  வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |