ஓப்போ என்ற புதியவகை ஸ்மாரட் வாட்ச்களை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த மாத மூன்றாம் வாரத்தில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இப்பொழுது வரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலில் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து ஒப்போ என்ற புது வகை ஸ்மார்ட் வாட்ச் ஒன்று அறிமுகமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
சீன சந்தையில் இந்த ஒப்போ வாட்ச் மார்ச் மாதம் அறிமுகமானது. இந்த வகை வாட்ச் AMOLED டிஸ்ப்ளே, 41எம்எம் மற்றும் 46எம்எம் என்ற இரு மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் 1.6 மற்றும் 1.9 இன்ச் டிஸ்ப்ளேக்கள் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகை புதிய ஒப்போ ஸ்மார்ட்வாட்ச்களில் பிரீமியம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எடிஷனும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இயக்கமானது குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2500 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் கூகுள் வியர் ஒஎஸ் மற்றும் கலர் ஒஎஸ்யின் இயங்குதளம் கொண்டு செயல்படுகிறது.