தமிழ் திரையுலகில் பல்வேறு ஆண்டுகளாக பிரபல இயக்குனர் எனும் பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் திரையுலகில் ஒரு ட்ரெண்டை இயக்குனரான மணிரத்னம் உருவாக்கினார். இவரின் இயக்கத்தில் வெளியாகிய பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த அடிப்படையில் இவர் இயக்கிய நாயகன் என்ற திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. அதாவது கமல், சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.
அவருக்கு திரையுலகில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் இது ஆகும். மும்பையில் நடைபெற்ற ஒரு உண்மை கதையை தழுவலாக கொண்டு இந்த படம் சித்தரிக்கப்பட்டிருக்கும். இத்திரைப்படத்தை முக்தா பிலிம்ஸ் தயாரித்தது. அந்த நேரம் இப்படத்தை எடுப்பதற்காக மணிரத்னம் ஏகப்பட்ட செலவு செய்ததாக முக்தா பிலிம்ஸ் அவர் மீது குற்றம் சாட்டியது. இதனால் அவர்மீது தயாரிப்பு நிறுவனத்துக்கு சிறு அதிருப்தியும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இதில் மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் அனைத்து காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக இருக்கும். அவ்வாறு காட்சிகள் வரும்வரை அவர் நடிகர்களை விட மாட்டார்.
அவருக்கு திருப்தி அளித்தால் மட்டும் அடுத்த காட்சிகள் படமாக்கப்படும். ஆனால் முக்தா பிலிம்ஸ் அவ்வாறு கிடையாது. சிறிது சிக்கனமாக செலவு செய்யும் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. ஒரு வழியே படம் வெளியாகி நன்றாக ஓடியது. படம் சூப்பர் ஹிட்டாக இருந்தாலும் இப்படத்தினால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கவில்லை. தாங்கள் போட்ட காசு மட்டுமே எங்களுக்கு கிடைத்தது என்று தயாரிப்பு நிறுவனம் அப்போது தெரிவித்தது.