தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தும் யாரும் நல்லா இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் கே.ராஜன்.
தமிழ் சினிமா உலகில் மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன். இவர் நடிகர்கள், நடிகைகள் என யாராக இருந்தாலும் வேறுபாடு இல்லாமல் விளாசி வருகின்றார். இந்நிலையில் முகமறியான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர்களை மதிக்காத, நஷ்டம் அடைய செய்யும் நடிகர், இயக்குனர்களை விளாசினார் கே.ராஜன். அவர் பேசியுள்ளதாவது தயாரிப்பாளர்களை மதிக்காத நடிகர், நடிகை, இயக்குனர் உள்ளிட்டோர் சிறிது காலத்திற்கு நல்லா இருந்தாலும் பிறகு கஷ்டப்படுவார்கள். அவர்கள் நல்லா இருக்கவே முடியாது.
சில இயக்குனர்களான சுந்தர்.சி, கங்கை அமரன், பி.வாசு, ராம் போன்றோர் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றார்கள். ஆனால் சிலரோ படபூஜை போட்டதுமே தயாரிப்பாளர்களை மறந்து விடுகின்றனர். அவர்களை மதிப்பதே இல்லை தயாரிப்பாளர்களை அவமானப்படுத்தினால் நஷ்டப்படுத்தினால் நான் கேட்பேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.தயாரிப்பாளர்களின் வயித்தெரிச்சல கொட்டிகிட்ட அப்புறம் நல்ல இருக்க மாட்டிங்க என்று கூறியுள்ளார். ஷாருக்கானின் சக்தே இந்தியா திரைப்படத்தை நஷ்டப்படுத்தியதற்காக நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயை மறைமுகமாக விளாசியுள்ளார் கே.ராஜன்.