சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரை கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். மேலும் அவருக்கு சொந்தமான சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைபுலி தானு அலுவலகம், ஞானவேல் ராஜா , எஸ் ஆர் பிரபு ஆகிய தயாரிப்பாளர்களின் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.
இதில் அன்பு செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 26 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.