Categories
சினிமா

தயாரிப்பாளர் ஏக்தா கபூர், தாயார் ஷோபா கபூரை அரெஸ்ட் பண்ணுங்க…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பிரபல இந்திப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர், வலைத்தள தொடர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ் சீசன் 2 எனும் பெயரில் வலைதள தொடர் ஒன்றின் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டார். இவற்றில் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கின்றனர் மற்றும் தேசிய சின்னம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் பெறப்பட்டது. இது தொடர்பாக இந்தூரில் ஏக்தா கபூர் மற்றும் பிறர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகாரின் பெகுசராய் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ஷாம்பு குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதே போல் பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் போன்றோருக்கு எதிராக பீகாரின் முசாபர்பூர் நீதிமன்றத்திலும் புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில் பீகாரின் பெகுசராய் கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் போன்றோருக்கு சம்மன் அனுப்பியது. எனினும் அவர்கள் இதனை புறக்கணித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைதுசெய்யும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |