உடலில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் தீர்வாக அமையும் தயிரில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி உடலுக்கு ஆரோக்கியம் தரும் தயிரில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
தயிரில் உள்ள புரோட்டின், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
வயிற்றுப்போக்கு சரியாக வெந்தயம் மற்றும் தயிர் ஒரு கப் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு சரியாகும்.
வாழைப்பூ மற்றும் வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
உடல் சூடு நீங்க தயிரை கடைந்து உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தயிர் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதால் இதயம் காக்கிறது. தலையில் அப்ளை செய்து வந்தால் தலைமுடியைப் பாதுகாத்து பொடுகை நீக்க உதவுகிறது. பெண்களின் பிறப்பு உறுப்பின் சமநிலையைப் பராமரித்து அதன் ஆரோக்கியம் காய்க்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. ஆற்றலைக் கொடுக்கிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. கால்சியம் நிறைந்து இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது.