வாலிபர் தனது அண்ணன் மற்றும் அண்ணியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விராலிப்பட்டி பகுதியில் ரமேஷ்-பாண்டியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரமேஷுக்கும், அவரது தம்பியான சக்திவேல் என்பவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடிபோதையில் சக்திவேல் ரமேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் ரமேஷ் மற்றும் பாண்டியம்மாளை தரக்குறைவான வார்த்தைகளால் சக்திவேல் திட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட ரமேஷை சக்திவேல் அரிவாளால் வெட்டியுள்ளார்.
அதனை தடுக்க வந்த பாண்டியம்மாளையும் சக்திவேல் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த ரமேஷ் மற்றும் பாண்டியம்மாள் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.