Categories
உலக செய்திகள்

“தரக்குறைவாக” பேசிய பிரதமர்…. ஷாக்கான பொதுமக்கள்…. காரணம் என்னன்னு தெரியுமா….?

பிரான்சின் அதிபரான இமானுவேல் மேக்ரான் அந்நாட்டிலுள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களை தரக்குறைவாக விமர்சித்ததையடுத்து அதிரடியான கட்டுப்பாடு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 2,00,000 த்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் பிரான்ஸின் ஜனாதிபதியான இமானுவேல் அந்நாட்டிலுள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

அதாவது கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத நபர்களை நாங்கள் சிறையில் அடைக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர்களை இழிவுபடுத்த போகிறேன் என்று பிரான்சின் ஜனாதிபதியான இமானுவேல் தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி வருகின்ற 15 ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உணவகங்கள் உட்பட எந்தவித பொது இடங்களுக்கும் செல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |