Categories
மாநில செய்திகள்

தரக்குறைவான ரேஷன் பருப்பு விநியோகம்….. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட வீட்டு உபயோகபொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இவற்றில் பல்வேறு பொருட்கள் தரம்குறைந்து இருந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர்.

அவற்றில் மக்களுக்கு அதிக தேவையுள்ள துவரம்பருப்பு மோசமான நிலையில் இருந்ததாகவும் கூறினர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது கேந்திரிய பந்தர் என்ற நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தரம்குறைந்த துவரம் பருப்பை வழங்கியது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அதே நிறுவனத்திடம் தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்பு உள்ஒப்பந்தம் செய்து இருக்கிறது.

இதை கண்டித்து ஸ்ரீசாய்ராம் இம்பெக்ஸ் எனும் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இம்மனுவில் தமிழக கிடங்குகளிலுள்ள பருப்புகளை சேகரித்து அரசு ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரியிருந்தது. இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் இன்னும் 2 வாரங்களில் இந்த மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |