Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தரமற்ற இறைச்சிகள்… உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை… உணவகங்களுக்கு அபராதம்…!!

தரமற்ற இறைச்சிகளை தாயார் செய்து விற்பனை செய்த உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக அசைவ உணவகங்களில் தரமற்ற இறைச்சிகளை வைத்து சமைப்பதாக புகார் எழுத்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழக முழுவதிலும் உள்ள அசைவ உணவகங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது 20க்கும் மேற்பட்ட அசைவ உணவகங்களில் நடத்திய சோதனையில் அதிக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டு சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 65கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அந்த இறைச்சிகளை பினாயில் ஊற்றி அளித்துள்ளனர். மேலும் சுகாதாரமற்ற இறைச்சிகளை தயார் செய்த 8 உணவகங்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து இதேபோல் சுகதரமற்ற இறைச்சிகளை சமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று எச்சரித்துள்ளனர்.

 

Categories

Tech |