பெங்களூருவில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம் எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை மாநகராட்சி ஊழியர்கள் இடித்துவருகின்றன. கடந்த சில நாட்களாகவே பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிகரித்து வருகின்றது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த புதன்கிழமை முதலில் சோதனை நடத்தி வீடுகளை இடித்து வருகின்றனர். பெங்களூரு மாநிலத்தில் மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் ஒரு வீடு புதிதாக கட்டப்பட்டு வந்தது. அதில் சிலர் கூடியிருந்தனர்.
அந்த கட்டிடம் தரமில்லாமல் கட்டப்பட்டு இருந்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் அந்த கட்டிடத்தின் அஸ்திவாரம் சரிந்து விழுந்தது. இதனால் ஒட்டுமொத்த கட்டிடமே ஆட்டம் கண்டது. இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர். மேலும் அங்கிருந்த அனைவரையும் வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.