தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்க முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக நடந்த ஆய்வில், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார். ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் இருப்பதை அந்தந்த பகுதி அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.