Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தரமான உணவு வழங்க வேண்டும்… தடுப்பூசி கட்டாயம்… ஆட்சியரின் திடீர் ஆய்வு…!!

அரசு பழங்குடியினர் மேல்நிலைபள்ளி மற்றும் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள முள்ளுகுறிச்சியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்  மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீரென அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பள்ளியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா எனவும், வகுப்பறைகளில் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டார்.

இதனையடுத்து பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் முறையாக உள்ளதா என்றும், பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா என்றும் கேட்டறிந்த ஆட்சியர் விடுதியில் தயாரான உணவுகளை சாப்பிட்டு பார்த்துள்ளார். மேலும் அரசின் உணவு பட்டியல் படி மாணவர்களுக்கு முறையான, தரமான உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து ஆட்சியர் ஸ்ரேயாசிங் மெட்டாலாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கும் சென்று ஆய்வு செய்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரியின் பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட துணை ஆட்சியர் கோட்டை மாவட்டம் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன் மற்றும் சுந்தரம் உட்பட பல அதிகாரிகள் உடனிருந்துள்ளனர்.

Categories

Tech |