Categories
கிரிக்கெட் விளையாட்டு

தரமான சம்பவம்…! என்னவா அசிங்கப்படுத்த நினைச்ச பெல்லார்ட்…? வச்சி செய்த கோலி….!!

கொல்கத்தாவில் 2 ஆவது நாளாக தொடங்கியுள்ள டி 20 தொடரில் விராட் கோலியை அசிங்கப்படுத்த நினைத்த பெல்லார்ட்டுக்கு அவர் தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்கியுள்ளது. இந்நிலையில் டி20 தொடருக்கான 2 ஆவது போட்டி நேற்று ஆரம்பித்துள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் டாஸ்ஸை வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இவ்வாறு இருக்க இந்திய அணி சார்பாக முதலில் இஷன் கிஷனும், ரோகித் சர்மாவும் களமிறங்கியுள்ளார்கள். இவர்களுக்கு முதல் ஓவரில் பந்துவீசிய அகில் 10 ரன்களை அவர்களுக்கு கொடுத்துள்ளார். அதன்பின்பு 2 ஆவது ஓவரில் பந்துவீசிய செல்டோன் கிஷனை அவுட் செய்துள்ளார்.

இதனையடுத்து 3 ஆவது ஓவரில் களமிறங்கிய விராட் கோலிக்கு மீண்டும் அகில் தான் பந்து வீசியுள்ளார். அப்போது ஷார்ட் லெக் திசையில் விராட் கோலிக்கு அருகே பெல்லார்ட் நின்றுள்ளார். இப்படி வழக்கமாக டெஸ்டில் தான் நிற்பார்கள். ஆனால் இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத விராட் கோலி 3 ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசி பெல்லார்ட்டுக்கு சிறந்த பதிலடியை கொடுத்துள்ளார். இதனையடுத்து ரோஹித்தும் அதிரடி கொடுத்ததால் இந்திய அணி முடிவில் 49/1 என்ற ரன்களை குவித்துள்ளது.

Categories

Tech |