லலித் மோடியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை சுஷ்மிதா சென்னும், லலித் மோடியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கடந்த 14-ஆம் தேதி லலித் மோடி தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனுடன் தானும், சுஷ்மிதா சென்னும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் அதில் பதிவிட்டிருந்தார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மற்றொரு பக்கம் நெட்டிசன்கள் 2 பேரையும் வெளுத்து வாங்குகின்றனர். இந்நிலையில் சுஷ்மிதா சென்னை நெட்டிசன்கள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என பல விதமாக ட்ரோல் செய்தனர். இதற்கு சுஷ்மிதா சென்னும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறார். இதனையடுத்து லலித் மோடி பண மோசடி செய்து விட்டு ஊரை விட்டு ஒளிந்திருக்கும் குற்றவாளியா என்று சிலர் விமர்சனம் செய்தனர்.
https://www.instagram.com/p/Cgcj9sotOj9/?utm_source=ig_embed&utm_campaign=loading
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லலித் மோடி தன்னுடைய இணையதள பக்கத்தில் ஒரு கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டு அதில் சில வசனங்களையும் எழுதியுள்ளார். அதாவது தான் ஒரு குற்றவாளி அல்ல என்றும், ஐபிஎல் தொடரை நடத்தி என்னுடைய கஜானாவை ஏற்கனவே நிரப்பி விட்டேன் எனவும் கூறினார். அதன்பிறகு நாட்டில் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைவாசி போன்றவற்றை பற்றி கவலைப்படாத பொதுமக்கள் நானும் சுஷ்மிதா சென்னும் டேட்டிங் செய்வதை பற்றி கவலைப்படுகின்றனர் எனவும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் பதிவுகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.