Categories
சினிமா தமிழ் சினிமா

“தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை….. இறங்கி செய்யணும் போல இருக்கு”…. கடுமையாக விளாசிய கொதம் மேனன்….!!!!!!

படங்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறனை கௌதம் மேனன் கடுமையாக விளாசி உள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சென்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இத்திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. ஆனால் இத்திரைப்படத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விளாசியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, இத்திரைப்படத்திற்காக சிம்பு மிகவும் கஷ்டப்பட்டு தனது உடலை குறைத்துள்ளார். மேலும் சென்ற திரைப்படத்தில் இல்லாத அளவில் இத்திரைப்படத்திற்காக தனது உழைப்பை கொடுத்திருக்கின்றார். மேலும் அவர் உடல் எடையை குறைப்பதற்காக சைவ உணவுகளையே சாப்பிட்டார். ஆனால் விமர்சனம் என்ற பெயரில் படத்தை ஒரு நிமிடத்தில் கேலி செய்து பேசுகின்றார்கள். வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு 80 சதவீதம் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றது.

ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அடுத்தவர் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடாதீர்கள். திரைப்படங்களை மரியாதையாக விமர்சனம் செய்யுங்கள். ப்ளூ சட்டை மாறன் பெயரையே சொல்லவே கூடாது என நினைக்கிறேன். அவர் மீது பயங்கர கடுப்பும் பயங்கர வெறுப்பும் இருக்கின்றது. அவருக்கு பணம் வரவேண்டும் என்பதற்காகவும் யூட்யூப் சேனலில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும் ரிவ்யூ கொடுக்கின்றார். அவரை இறங்கி ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றுவதாக கடும் கோபமாக பேசி உள்ளார் கௌதம் மேனன்.

Categories

Tech |