36 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரையை விவசாயிகள் ஏலம் விட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த விற்பனை கூடத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் உற்பத்தி செய்த 1,749 மூட்டை நாட்டு சர்க்கரையை ஏலம் விடுவதற்காக கொண்டு வந்தனர். இந்நிலையில் நாட்டு சர்க்கரை 3 தரமாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.
அதில் 60 கிலோ கொண்ட முதல்தர நாட்டுசர்க்கரையின் மூட்டை குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 70 ரூபாய்க்கும், அதிகபட்சம் 2 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. மேலும் இரண்டாம் தரம் நாட்டு சக்கரை இரண்டாயிரத்து 20 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2060 ரூபாய்க்கும், மூன்றாம் தரம் 20 ஆயிரத்து 60 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. நாட்டு சக்கரை மொத்தம் 37 லட்சத்து 7 ஆயிரத்துக்கும், உருண்டை வெல்லம் 36 லட்சத்து 68 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.