நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் தளங்களில் வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 300 வரை விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் விஐபி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்பதிவு செய்தவர்கள் இந்த ஆண்டு டிசம்பருக்குள் தரிசனம் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.