Categories
அரசியல்

தரிசு நிலத்தை வாங்கி விவசாயம் செய்யும் நடிகை தேவயானி…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான தேவயானி ஈரோடு அருகே உள்ள தன்னுடைய தோட்டத்திற்கு பக்கத்தில் ஒரு தரிசு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சந்திப்பாளையம் கிராமத்தை சேர்ந்த தேவயானியின் கணவரான இயக்குனர் ராஜகுமாரன் மற்றும் தேவயானி இருவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு அடிக்கடி சென்று வருவார்களாம். அதோடு மட்டுமில்லாமல் இவர்கள் அருகில் உள்ள மாத்தூரிலும் நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்லும்போது விவசாய நிலங்களையும் பார்த்து வருவார்களாம்.

இந்த நிலையில் அவர்களுடைய தோட்டத்திற்கு அருகே 2 ஏக்கர் விவசாய நிலத்தை ஒருவர் பிளாட்டாக மாற்றியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தேவயானி 2 ஏக்கர் வீட்டுமனைகளை அந்த நபரிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார். பிறகு அந்த நிலத்தில் செண்டுமல்லி பயிரிட்டு அதனை விவசாய நிலமாக மாற்றியுள்ளார். தற்போது அந்த நிலத்தில் செண்டுமல்லி பூத்து குலுங்கி பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. நடிகை தேவயானியின் இந்த செயலுக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |