வீட்டிற்குள் புகுந்து 2 பேரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவாடை பகுதியில் சதிஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் நெருக்கிய நண்பர்கள் இந்நிலையில் ரமேஷ் குடிப்பதற்காக சதீஸ்குமாரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் சதீஸ்குமார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சதீஸ்குமார் மற்றும் சதிஷ்குமாரின் தாயாரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.