Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தரைப்பாலம் உடனடியாக அமைத்து தர வேண்டும்…. தண்ணீர் சூழ்ந்திருக்கும் வீடுகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

தரைப்பாலம் அமைத்து  தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மனபடுக்கை கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாய் 45 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பொதுப்பணி துறை மூலம் தூர்வாரும் திட்டத்தின் கீழ் தரைப்பாலம் அமைக்காமல் தூர்வாரப்பட்டது. இதனால் காவேரி ஆற்றில் இருந்து முத்தப்பன் காவிரி கால்வாய்க்கு திறந்து விடப்பட்ட தண்ணீர், செல்ல வேறு வழியின்றி அப்பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு புகுந்து விடுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது. தற்போது 20-க்கும்  மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல தற்காலிகமாக குழாய் அமைத்து தர வேண்டும் என்று நாங்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டோம். இதனால் ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு தரைப்பாலம் அமைத்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதை  தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |