பழைய அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பி விட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான பழைய அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருக்கும் ஒரு அறையை திறந்து வைத்து 3 பேர் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செங்கல் பெயர்ந்து தானாக கீழே விழுந்ததால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர்.
சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.