Categories
லைப் ஸ்டைல்

தரையில் உட்கார்ந்து சாப்பிட்டால்… உங்களின் ஆயுள் கூடும்… இத கொஞ்சம் படிச்சி பாருங்க…!!!

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதிகாலத்திலிருந்தே உள்ளது. டைனிங் டேபிளில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டோ அல்லது படுக்கையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது வசதியாக இருப்பது போல் நமக்குத் தோன்றலாம். நாம் கால்களை குறுக்காக மடக்கி, சம்மணம் போட்டு தரையில் உட்காரும் போது இயல்பாகவே ஒரு ஆசன நிலைக்கு வந்து விடுகிறோம். இதற்கு சுகாசனம் அல்லது பாதி பத்மாசனம் என்று பெயர்.

இப்படி உட்காரும்போது நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். அதனால் வயிற்று தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை சீக்கிரம் செரிக்க வைக்கிறது. மேலும் தரையில் அமர்வதால் முழங்கால் மூட்டுக்களும், இடுப்பு எலும்புகளும் வலுவடைந்து மற்றும் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் சாப்பிடும் போது தரையில் உட்கார்ந்து சாப்பிடுங்கள். அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Categories

Tech |