சுற்றுலா பயணிகள் சென்ற இலகு ரக விமானம் தீ பிடித்து எறிந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டின் நாஸ்கா நகரிலுள்ள மரியா ரீச் என்ற விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் இந்த விமானமானது திடீரென்று தரையில் மோதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த டச்சு மற்றும் சிலி நாட்டை சேர்ந்த 5 சுற்றுலா பயணிகளும், பெரு நாட்டை சேர்ந்த 2 விமான ஓட்டிகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.