தரை பாலத்தை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய நபரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அந்தியூர் பெரிய ஏரி உபரி நீர் வெளியேறி சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி வந்த நபர் தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தின் வேகம் அதிகரித்தது. இதனால் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்ட அவர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மனித சங்கிலியாக கைகோர்த்து மோட்டார் சைக்கிளையும், அந்த நபரையும் பத்திரமாக மீட்டுனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.