Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தரை பாலத்தை மூழ்கடித்த தண்ணீர்…. வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர்…. நொடியில் உயிர் தப்பிய ஓட்டுநர்…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கொங்கராயனூர் கிராமத்தில் ஓட்டுநரான ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் அருளவாடி கிராமத்தில் உள்ள நிலத்தை உழுவதற்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தார்.

இதனையடுத்து கொங்கராயனூர்- அருளவாடி இடையே இருக்கும் தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்வதை பார்த்தும், ராமு பாலத்தை கடந்து செல்லும் முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமுவை பத்திரமாக மீட்டனர். தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டிராக்டரை மீட்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

Categories

Tech |