திருவாரூரில் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 5ஆம் தேதி விடுமுறை விடப்படுவதால் அதை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.